கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்... கணவர் எடுத்த விபரீத முடிவு... உருக்கமான கடிதம்

கள்ளக்காதலனுடன் மனைவி ஓடியதால் கணவர் தேவராஜ் வேதனை அடைந்தார்.

Update: 2024-07-20 00:24 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒசஹள்ளியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி மாதவி. இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 17 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அதே கிராமத்தில் தேவராஜ், பெட்டி கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில், மாதவிக்கு அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்த்குமார் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதுபற்றி தேவராஜிக்கு தெரியவந்ததும், மாதவியை கண்டித்துள்ளார். ஆனாலும் ஆனந்த்குமாருடன் உள்ள கள்ளத்தொடர்பை மாதவி கைவிடவில்லை. மாறாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனந்த்குமாருடன், மாதவி வீட்டை விட்டு ஓடிவிட்டார். மனைவி, கள்ளக்காதலனுடன் ஓடியதால் தேவராஜ் வேதனை அடைந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு தனது வீட்டில் வைத்து விஷத்தை குடித்து விட்டு தேவராஜ் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் துமகூரு புறநகர் போலீசார் விரைந்து சென்று தேவராஜின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், 17 ஆண்டுக்கு முன்பு மாதவியை காதலித்து திருமணம் செய்திருந்தேன். கள்ளக்காதலனுடன் ஓடி விட்டதால், எனது மரியாதை கெட்டு விட்டது. எனது தற்கொலைக்கு மனைவி மாதவி, ஆனந்த்குமார் தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதப்பட்டு இருந்தது.

இதையடுத்து, மாதவி மற்றும் ஆனந்த்குமார் மீது துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்