உத்தர பிரதேசம்: வேன் மோதி 3 சாதுக்கள் உயிரிழப்பு

அயோத்திக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்த 3 சாதுக்கள் வேன் மோதி உயிரிழந்தனர்.

Update: 2024-05-15 14:12 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள பரஸ்ராம்பூர் பகுதியில் வேன் மோதியதில் சாலையில் சென்று கொண்டிருந்த 3 சாதுக்கள் உயிரிழந்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், ராம் மிலன் பால், அச்சே லால் மற்றும் ராம்பஜன் ஆகிய 3 சாதுக்கள் மக்கவுடா புனித தளத்தில் இருந்து அயோத்திக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தபோது சிகந்தர்பூர் கிராமம் அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

வேன் மோதியதில் பலத்த காயம் அடைந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து நடந்தபோது வேன் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்