சூதாட்டத்தில் தோல்வி: நண்பருடன் உறவு கொள்ள கூறிய கணவன்: மனைவி எடுத்த அதிரடி நடவடிக்கை

சூதாட்டத்தில் மனைவியை பணயம் வைத்து தோற்றதால் நண்பருடன் உறவு கொள்ள கூறி கணவன் வற்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-05-23 09:47 GMT

லக்னோ,

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே அகமதுநகர் பகுதியில் வசிக்கும் நபர் சூதாட்டத்தில் தனது மனைவியை பணயம் வைத்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பெண்ணுக்கும் அவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. கணவன் மதுபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் தினமும் சூதாடுவதை வழக்கமாக கொண்டுள்ளாராம்.

இதனால் பணத்தை இழந்துள்ளார். இவரது குடும்பமும் வறுமையில் தள்ளாடியது. ஆனால் அவர் இதை பொருட்படுத்தாமல் தினமும் குடித்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் பெண்ணின் கணவன் சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல போதையுடன் வீட்டிற்கு வந்துள்ளார். வந்த பின்னர் அவர் கூறிய வார்த்தைகள் தான் மனைவியை இடி தாக்கியது போல் இருந்தது.

அன்றைய தினம் அந்த போதை நபர் தனது நண்பர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சூது விளையாட்டில் ஒரு கட்டத்தில் தனது மனைவியை பணயம் வைத்தே விளையாடி தோற்றுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு தனது நண்பருடன் வந்துள்ளார். அப்போது தனது நண்பருடன் உறவு கொள்ளுமாறு மனைவிக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

சூதாட்டத்தில் எனது நண்பரிடம் உன்னை இழந்துவிட்டேன். எனது நண்பர் உன்னை அழைத்துச் செல்வார். நீ உடன் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் மனைவி அதிர்ச்சி அடைந்தார். மேலும் நான் செல்ல முடியாது என மனைவி மறுக்கவே அவரை கடுமையாக அடித்து உதைத்துள்ளார் இதனால் கடும் கோபமடைந்த பெண் அருகேயுள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

பெண்ணின் புகாரை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உரிய விசாரணை நடத்தி கணவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். தலைமறைவான கணவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சூதாட்டத்தில் மனைவியை பணயம் வைத்த கணவரின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்