உ.பி.: அனாதையாக நின்ற கன்டெய்னர் லாரியில் உயிரற்று கிடந்த 29 பசுக்கள்

உத்தர பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அனாதையாக நின்ற கன்டெய்னர் லாரியில் ஒரேயொரு பசுவை தவிர 29 பசுக்கள் உயிரற்று கிடந்துள்ளன.

Update: 2022-11-26 09:43 GMT



மதுரா,


உத்தர பிரதேசத்தில் கவ் சேவா ஆயோக் என்ற பெயரில் பசு பாதுகாப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், உத்தர பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்தது.

அதன் கதவுகள் மூடப்பட்டு இருந்துள்ளது. நீண்ட நேரம் நின்றிருந்த லாரி பற்றி போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து, அவர்கள் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று சோதனையிட்டனர்.

இந்த நிலையில், மதுரா வட்ட அதிகாரி ஹர்சிதா சிங் கூறும்போது, நாங்கள் சென்றபோது ஓட்டுனரை காணவில்லை. தப்பியோடி விட்டார். மூடியிருந்த கன்டெய்னர் லாரிக்குள் 29 பசுக்கள் இறந்த நிலையில் கிடந்தன.

இதுதவிர, ஒரே ஒரு பசு உயிருடன் இருந்தது. இதுபற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்