வனப்பகுதி நிலத்தை சட்டவிரோதமாக வாங்கியதாக உத்தரகாண்ட் முன்னாள் டி.ஜி.பி. மீது வழக்குப்பதிவு

உத்தரகாண்ட் மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்தவர் பி.எஸ்.சித்து.

Update: 2022-10-24 18:22 GMT

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்தவர் பி.எஸ்.சித்து. இவர் கடந்த 2014-ம் ஆண்டு டேராடூனில் ராஜ்பூர் வனசரகத்திற்கு உட்பட்ட பீர் கிர்வாலி பகுதியில் உள்ள வன நிலத்தை சட்டவிரோதமாக வாங்கியதாக தெரிகிறது. மேலும் அந்த நிலத்தில் உள்ள மரங்களை வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடாப்ாக வனத்துறை சார்பில் மாநில அரசுக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது. அதில், வனப்பகுதி நிலத்தை சட்டவிரோதமாக வாங்கிய முன்னாள் டி.ஜி.பி. சித்து மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், முன்னாள் டி.ஜி.பி. சித்து மீது வழக்குப்பதிவு செய்ய மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, வனத்துறை முதன்மை செயலாளர் விஜயக்குமார், வனப்பகுதி நிலத்தை வாங்கியதாக முன்னாள் டி.ஜி.பி. சித்து மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். ேமலும் மரங்களை ெவட்டியதாக அவருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்