காங்கிரஸ் ஒன்றும் எதிர்க்கட்சிகளின் தலைவன் அல்ல - திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.

காங்கிரஸ் ஒன்றும் எதிர்க்கட்சிகளின் தலைவன் அல்ல என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கூறியுள்ளார்.

Update: 2023-03-17 18:37 GMT

கொல்கத்தா,

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமையுமா? அல்லது 3-வது அணி உருவாகுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜியை அவரது கட்சி எம்.பி. சுதிப் பண்டிபொத்யா இன்று சந்தித்தார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய சுதிப் எம்.பி.,

எங்கள் கட்சி 3-ம் அணி அமைப்பது குறித்து தற்போது பேசவில்லை. காங்கிரஸ் தங்களை எதிர்க்கட்சிகளின் தலைவன் என்று எண்ணிக்கொண்டிருக்க வேண்டாம். நாங்கள் எங்கள் வழியில் செல்வோம். காங்கிரஸ், பாஜகாவை விட்டு விலகியே இருப்போம். பாஜகவை எதிர்த்து போரிட சக்திவாய்ந்த பிராந்திய கட்சி தலைவர்களை மம்தா பானர்ஜி சந்திப்பார்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்