பாம்பு கடி குணமாக்க சாமியாரிடம் அழைத்து சென்ற பெற்றோர்: மூட நம்பிக்கையால் பறிபோன இரு சிறுமியின் உயிர்கள்...!

ராஜஸ்தானில் நள்ளிரவில் பாம்புக்கடியை குணமாக்க மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் சாமியாரிடம் அழைத்து சென்றதால் 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2022-09-16 10:01 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் நள்ளிரவில் இரண்டு சிறுமிகளை விஷப்பாம்பு கடித்துள்ளது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் செல்லாமல் அவர்களது பெற்றோர்கள் அங்குள்ள ஒரு சாமியாரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அந்த சாமியார் இரண்டு சிறுமிகளுக்கும் சிகிச்சை அளித்த நிலையில் 2 சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

2 சிறுமிகளையும் சாமியாரிடம் கொண்டு சென்றபோது அந்த சாமியார் சிறுமிகளை தலையில் துடைப்பத்தால் அடித்து மந்திரம் ஓதி சிகிச்சை அளித்ததாகவும் சிகிச்சை அளிக்காததால் அதன் பின்னர் தாமதமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அதனால் சிறுமிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்