கோவில்களில் அறங்காவலர் பணி; தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கோவில்களில் அறங்காவலர்களை நியமிக்கும் பணியை முடிக்க தமிழக அரசுக்கு மேலும் 4 வாரம் அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-12-11 16:26 GMT

புதுடெல்லி,

இந்து கோவில்களை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான அறங்காவலர் குழுவை அமைக்க கோரி இந்து தர்ம பரிஷத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு அமர்வு இன்று விசாரணை செய்தது. இதுவரை 7,661 கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 2,902 கோவில்களுக்கான அறங்காவலர்கள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதே சமயம் பல்வேறு வழக்குகள் காரணமாக 1,284 கோவில்களில் அறங்காவலர்களை நியமிக்க முடியாத சூழல் உள்ளதாக அவர் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, கோவில்களில் அறங்காவலர்களை நியமிக்கும் பணியை முடிக்க தமிழக அரசுக்கு மேலும் 4 வாரம் அவகாசம் அளித்து விசாரணையை பிப்ரவரி 25-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்