மசூதி தொடர்பான வழக்குகள்; புதிய மனுக்களை விசாரிக்க கூடாது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

நிலுவையில் உள்ள வழக்குகளில் இடைக்கால உத்தரவோ அல்லது இறுதி உத்தரவோ பிறப்பிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-12-12 12:59 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 1991-ம் வழிபாட்டு தளங்கள் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் எந்த ஒரு மத வழிபாட்டு தலமும் 1947 ஆகஸ்ட் 15-ந்தேதியில் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையிலேயே தொடர வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தின் சில சலுகைகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு நீதிமன்றத்தின் முன் உள்ளதால், மசூதிகள் இருக்கும் இடத்தில் கோவில் இருந்ததாக கூறி புதிய வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்பட கூடாது என்றும், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளில் இடைக்கால உத்தரவோ அல்லது இறுதி உத்தரவோ பிறப்பிக்க கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

மத்திய அரசின் பதில் இல்லாமல் வழிபாட்டு தலங்கள் சட்டத்திற்கு எதிரான மனுக்களை விசாரித்து தீர்ப்பு கூற முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், வழிபாட்டு தலங்கள் சட்டத்திற்கு எதிரான மனுக்களுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் மத்திய அரசு பதிலளித்த 4 வாரங்களுக்குள் விளக்க மனு தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்