அக்னிபத் திட்டம் இளைஞர்களுக்கு புதிய பரிமாணத்தை கொடுக்கும்- யோகி ஆதித்யநாத் வரவேற்பு

மத்திய அரசு அக்னிபத் என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது

Update: 2022-06-16 17:24 GMT

Image Courtesy :PTI 

மத்திய அரசு புதிய அக்னிபத் என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தின்படி ராணுவத்தில் சேரும் வீரர்களுக்கு 4 ஆண்டு காலத்திற்கு மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படுவர். இதில் வீரர்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்கப்படும். 4 ஆண்டுகால பணிக்காலம் முடிவடைந்ததும் சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும். ஆனால் இவர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கபட மாட்டாது என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் இளைஞர்கள் நேற்றுமுதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளனர்.

அக்னிபத் திட்டத்திற்கு ஆதரவாக உத்தர பிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் அக்னிபத் திட்டம் இளைஞர்களின் வாழ்க்கைக்கு புதிய பரிமாணத்தையும் அவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு பொன்னான அடித்தளத்தையும் கொடுக்கும் என அவர் கூறி உள்ளார். மேலும், அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் ராணுவ வீரர்களுக்கு உத்தர பிரதேச மாநிலத்தில் காவல்துறை மற்றும் இதர பணிகளுக்காக முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்