தெலுங்கானாவில் குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து; 6 பேர் உயிரிழப்பு

தெலுங்கானாவில் குடியிர்ப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-03-17 12:00 GMT

செகந்திரபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் செகந்திராபாத் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 7 முதல் 8 தளங்கள் வரை ஏற்பட்ட தீ விபத்து மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.

இந்த தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது மேலும் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து 12 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடைபெற்றதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்