குழந்தை இல்லாததால் மனமுடைந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை

குழந்தை இல்லாததால் விரக்தியடைந்த தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.;

Update:2024-09-21 12:54 IST

கோப்புப்படம் 

தானே,

மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில், ஷாஹாபூரில் உள்ள நாட்கான் பகுதியில் உள்ள குடியிருப்பில் ஒரு தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசாருக்கு கடந்த வியாழக்கிழமை தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர்கள் ஹரேஷ் உகாடா (வயது 28) மற்றும் அவரது மனைவி (25) ஆகியோர் என தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் ஹரேஷ் மற்றும் அவரது மனைவி தற்கொலை செய்ய காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், முதற்கட்ட தகவலின்படி, குழந்தை இல்லாததால் விரக்தியடைந்த தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் இன்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்