பிரச்சினைகளுக்கு தொழில்நுட்பத்தில் தான் தீா்வு உள்ளது; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு

பிரச்சினைகளுக்கு தொழில்நுட்பத்தில் தான் தீா்வு உள்ளது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2022-09-21 18:45 GMT

பெங்களூரு:

நுட்பம் மாறியுள்ளது

மத்திய அரசு சார்பில் ஆசியாவின் பெரிய கல்வி கண்காட்சி தொடக்க விழா பெங்களூரு துமகூரு ரோட்டில் உள்ள சர்வதேச கண்காட்சி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

ஆசியாவின் பெரிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று (நேற்று) தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அமல்படுத்த அரசு தயாராக உள்ளது. கல்வி கொள்கை முறை மற்றும் பயிற்றுவிக்கும் நுட்பம் மாறியுள்ளது. இந்த மாற்றத்தை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். நல்ல கல்வி முறையை உருவாக்க இது பயன்பட வேண்டும்.

கற்பித்தலில் தெளிவு

வெறும் பட்டங்களை பெறுவதால் கற்றல் முடிந்து விடுவது இல்லை. அதற்கு பின்னரும் பல விஷயங்களை மேற்கொள்ள நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். கல்வி கற்றலுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அதாவது, புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கற்பித்தலில் தெளிவு, எப்போது, எப்படி கற்பிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.

மாணவர்கள் எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் கற்க வேண்டும். அதற்கு கல்வி கொள்கைளை வகுப்பவர்கள் குழந்தைகளாக மாறி சிந்திக்க வேண்டும். உயர்கல்வித்துறை பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. புதிய செல்போன் செயலிகள் வந்த வண்ணம் இருந்தாலும் அது உள்ளூர் அளவிலும், உலக அளவிலும் பயனுள்ளதாக இல்லை. தற்போது எழுந்துள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தொழில்நுட்பத்தில் தான் தீர்வு உள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்