தேர்வில் காப்பி அடித்ததாக ஆடையை கழற்றி சோதனையிட்ட ஆசிரியை - அவமானம் தாங்காமல் தீக்குளித்த மாணவி

மாணவியின் ஆடையை கழற்றி ஆசிரியை சோதனை செய்துள்ளார்.

Update: 2022-10-16 03:10 GMT

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவிகளுக்கு நேற்று முன் தினம் தேர்வு நடைபெற்றுள்ளது.

அப்போது, தேர்வு எழுந்த வந்த 9-ம் வகுப்பு மாணவி தேர்வில் காப்பி அடிக்க 'பிட் பேப்பர்' வைத்துள்ளதாக ஆசிரியை கருதியுள்ளார். இதனால், வகுப்பறைக்கு அருகே உள்ள அறைக்கு மாணவியை அழைத்து சென்ற அந்த ஆசிரியை மாணவியின் ஆடையை கழற்றி சோதனையிட்டுள்ளார். மாணவி எதிர்ப்பு தெரிவித்தும் ஆடையை கழற்றி சோதனை செய்துள்ளார். 

இந்நிலையில், ஆசிரியை தன் உடைகளை கழற்றி சோதனை செய்ததால் மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். பள்ளியில் தேர்வு முடிந்து மன உளைச்சலில் வீட்டிற்கு வந்த அந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்துள்ளார்.

இதில், தீக்குளித்ததில் வலியால் மாணவி கதறி துடித்துள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கடுமையான தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தேர்வில் காப்பி அடித்ததாக சிறுமியின் உடையை கழற்றி சோதனை செய்த ஆசிரியை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்