சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் கிடைத்த வெற்றி - பிரதமர் மோடி பெருமிதம்

சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் கிடைத்த வெற்றி என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-23 12:56 GMT

புதுடெல்லி,

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் இன்று வெற்றிகரமாக தரையிறங்கி வரலாறு சாதனை படைத்துள்ளது. லேண்டர் தரையிறங்கியதை தென்ஆப்பிரிக்காவில் இருந்து காணொலி வழியே பிரதமர் மோடி கண்டு ரசித்தார். அப்போது தேசிய கொடியை அசைத்து பிரதமர் மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதன்பின்னர் இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்தியா புதிய வரலாறு படைத்திருக்கிறது. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. நிலவின் தென் துருவத்தை அடைந்ததன் மூலம் யாரும் அடையாத சாதனையை இந்தியா அடைந்திருக்கிறது. வெற்றிக்கு உழைத்த அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கோடானுகோடி நன்றி. இது 140 கோடி இந்தியர்களின் இதயங்களின் மனவலிமைக்கான தருணம்.

இந்தியா தற்போது நிலவில் உள்ளது; சந்திரயான் 3 வெற்றிக்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். நிலா... நிலா... ஓடிவா ... பாடலை இஸ்ரோ விஞ்ஞானிகள் மெய்பித்துள்ளனர். மாபெரும் சாதனை படைத்திருக்கிறது இஸ்ரோ. நிலவுக்கு மனிதனை அனுப்புவது தான் அடுத்தக் கட்ட திட்டம்." என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்