புதிதாக 5 பேர் நியமிக்கப்பட்டதால் காங்கிரஸ் செயலாளர்களாக இருந்த 2 பேர் நீக்கம் சோனியா காந்தி உத்தரவு

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

Update: 2022-07-10 20:17 GMT

பெங்களூரு, 

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட 22 பேர் முக்கிய தலைவர்கள் அடங்கிய அரசியல் விவகார குழுவை அமைத்து நேற்று முன்தினம் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உத்தரவிட்டு இருந்தார். மேலும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருக்கும் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். அவருக்கு உதவியாக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்களாக நேற்று முன்தினம் ஸ்ரீதர்பாபு, விஷ்ணுநாத், ரோஜி எம்.ஜான், மையூரா ஜெயக்குமார், அபிஷேக் தத் ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்களாக இருந்த குல்தீப் ராய் சர்மா, ராமிந்தர் சிங் ஆல்வா ஆகிய 2 பேரையும் நீக்குவதாக சோனியா காந்தி அறிவித்துள்ளார். இவர்கள் 2 பேரும் கர்நாடக மேலிட பொறுப்பாளராக இருக்கும் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவுக்கு கீழ் கர்நாடக காங்கிரசில் நடக்கும் விவகாரங்களை கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்