மே.வங்காள பஞ்சாயத்து தேர்தல்: மத்திய படையினரை களமிறக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி - தடைகோரிய மனு தள்ளுபடி

மேற்குவங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலில் மத்திய படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தடை கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2023-06-20 08:06 GMT

டெல்லி,

மேற்குவங்காள மாநிலத்தில் அடுத்த மாதம் 8ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 11ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இதனிடையே, பஞ்சாயத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அம்மாநிலத்தின் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதனை தொடர்ந்து பஞ்சாயத்து தேர்தலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாயத்து தேர்தலில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரை களமிறக்க ஐகோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மேல்முறையிட்டு மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பஞ்சாயத்து தேர்தலில் மத்திய ரிசர்வ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவை உறுதி செய்ததுடன் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்