தாக்குதல் அச்சுறுத்தல் எதிரொலி: கர்நாடகத்தில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு பாதுகாப்பு

ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களில் தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தல் வந்துள்ளதால், கர்நாடகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-07 21:20 GMT

சிவமொக்கா: ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களில் தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தல் வந்துள்ளதால், கர்நாடகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு மிரட்டல்

கர்நாடகத்தில் உள்ள 4 ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள 2 ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள் தாக்கப்படும் என்று வாட்ஸ்-அப்பில் மர்மநபர் ஒருவர் தகவல் வெளியிட்டிருந்தார். இதுகுறித்து தமிழ்நாட்டை சேர்ந்த செந்தில் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிவமொக்காவில் கர்நாடக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-

பாதுகாப்பு அளிக்கப்படும்

உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டல் வந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு மிரட்டல் விடுத்த நபர் தமிழகத்தை சேர்ந்த செந்தில் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கர்நாடகத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற மிரட்டல் விடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக கர்நாடகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்