திருப்பதியில் டிசம்பர் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட் ஆன்லைனில் 11-ந் தேதி வெளியீடு

திருப்பதியில் டிசம்பர் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட் வரும் 11-ந் தேதி தேவஸ்தான இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-09 12:52 GMT

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன கட்டண டிக்கெட்டுகள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்கள் வரும் 11-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் 35 ஆயிரம் டிக்கெட் வீதம் டிசம்பர் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்கிற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள், 27-ம் தேதி காலை 10 மணிக்கு அதே இணைய தளம் மூலம் திருமலையில் தங்கும் அறைக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்த டிக்கெட்டுகள் முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு, அந்தந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்