சத்தீஷ்கார் மாநிலத்தில் இடஒதுக்கீடு அளவு 76 சதவீதமாக உயர்வு கோர்ட்டு ஒப்புதல் கிடைக்குமா?

சத்தீஷ்காரில் அரசு பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீட்டு அளவை 76 சதவீதமாக உயர்த்தி மாநில அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

Update: 2022-12-04 16:56 GMT

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் அரசு பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீட்டு அளவை 76 சதவீதமாக உயர்த்தி மாநில அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

இதன்மூலம் பழங்குடியினர் 32 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டோர் 27 சதவீதம், தாழ்த்தப்பட்டோர் 13 சதவீதம், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் 4 சதவீதம் இடஒதுக்கீடு பெற முடியும்.

மாநிலத்தில் பல்வேறு பிரிவினரின் மக்கள்தொகை அடிப்படையில் இந்த இடஒதுக்கீட்டு உயர்வு மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ள அரசு, இந்த 2 மசோதாக்களையும் அரசியல்சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்குமாறு தீர்மானமும் நிறைவேற்றி உள்ளது.

ஆனால் மாநில அரசின் இந்த மசோதா, அரசியல் ஆதாயத்துக்காக நிறைவேற்றப்பட்டு உள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். அத்துடன் இந்த மசோதாக்களுக்கு கோர்ட்டு தடை விதிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஏனெனில் மாநிலத்தில் 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீட்டு அளவை அனுமதிக்க முடியாது என ஏற்கனவே 2 முறை மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

எனவே சத்தீஷ்காரின் இந்த மசோதாக்களுக்கு கோர்ட்டு ஒப்புதல் வழங்குமா? என்பது வருகிற நாட்களில் தெரியவரும் என அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்