ராஜஸ்தான்: மைனர் சிறுமியை பலாத்காரம் செய்து உயிருடன் எரித்த 2 பேருக்கு மரண தண்டனை

ராஜஸ்தான்: மைனர் சிறுமியை பலாத்காரம் செய்து உயிருடன் எரித்த 2 பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-05-20 14:25 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ந்தேதி மாடுகளை மேய்க்கச் சென்றபோது மாயமானார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், 2 பேர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்துக் கொன்றது தெரியவந்தது.

இந்த வழக்கில் கன்ஹா மற்றும் காளு ஆகிய 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். பில்வாரா மாவட்ட போக்சோ கோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட 2 பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். அதே சமயம், இந்த வழக்கில் சாட்சியங்களை அழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட மற்ற 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களின் விடுதலைக்கு எதிராக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் மகாவீர் சிங் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்