மணிப்பூரில் நீடிக்கும் வன்முறை: மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
மணிப்பூர் வன்முறை தொடர்பாக டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் மோடி மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
மணிப்பூரில் மைதேயி மற்றும் சிறுபான்மை பழங்குடி சமூகத்தினரிடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது முதல் தொடர்ந்து வன்முறை நிலவி வருகிறது. இதுவரை 120- க்கும் மேற்பட்டோர் வன்முறைக்கு பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மக்கள் வீடு மட்டுமின்றி தீக்கரையாகியுள்ளது.
மத்திய ,மாநில அமைச்சர்களின் வீடுகளும் இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சிகள் அனைத்துக் கட்சி குழுவை மணிப்பூருக்கு அனுப்ப கோரிக்கை வைத்தனர்.
இந்தநிலையில், அமெரிக்க - எகிப்து பயணத்தை முடித்து விட்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடி மணிப்பூர் நிலவரம் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட மந்திரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.