திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.

Update: 2022-12-05 10:10 GMT

image courtesy: PTI

திருப்பதி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஆந்திராவுக்கு வருகை தந்துள்ளார். அவர் நேற்று இரவு 9 மணிக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து விமான மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரை, ஆந்திர கவர்னர் விஸ்வ பூஷன் அரிச்சந்திரன் ஆந்திர துணை முதல்-மந்திரி நாராயணசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதையடுத்து திருப்பதி வந்த ஜனாதிபதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று காலை 9.25 மணிக்கு வராஹ சாமி கோவிலிலும், பின்னர் 9.30 மணிக்கு ஏழுமலையான் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார். மகா துவாரம் வழியாக தரிசனத்திற்கு சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி ஜி கிஷன் ரெட்டி, மாநில மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டி ஜனாதிபதிக்கு லட்டு, தீர்த்த பிரசாதங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து அலிப்பிரியில் உள்ள கோசாலையில் நடத்த கோ மந்திர பூஜையில் கலந்து கொண்டார். இதையடுத்து திருப்பதியில் உள்ள மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்சியில் கலந்து கொண்டு மாணவிகளிடம் உரையாடினார். ஜனாதிபதி வருகையையொட்டி திருப்பதி முழுவதும் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்