3வது மாடி சுவரில் அமர்ந்து நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பெண் தவறி விழுந்து பலி - அதிர்ச்சி வீடியோ

3வது மாடி சுவரில் அமர்ந்து நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பெண் தவறி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-07-17 13:23 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவலி நகரில் அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 3வது மாடியில் தனியார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தூய்மை பணியாளராக தேவி என்ற பெண் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், தேவி நேற்று மதியம் 2.30 மணியளவில் அலுவலகத்தில் உள்ள தூய்மை பணிகளை முடித்துவிட்டு தனது சக ஊழியருடன் 3வது மாடி சுவரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது நகைச்சுவையாக சக ஊழியர் தேவியை கட்டிப்பிடிக்க முயன்றுள்ளார். இதனால் நிலைதடுமாறிய தேவி கண்ணிமைக்கும் நேரத்தில் 3வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். அவரை பிடிக்க முயன்ற சக ஊழியரின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

3வது மாடியில் இருந்து கீழே விழுந்த தேவி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், தேவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தேவி 3வது மாடியில் இருந்து கீழே விழும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்