தொடர் விடுமுறை எதிரொலி: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
அடுத்தடுத்த விடுமுறை நாட்களால் திருப்பதி ஏழுமலையான தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருப்பதி,
அடுத்தடுத்த விடுமுறை நாட்களால் திருப்பதி ஏழுமலையான தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், இலவச தரிசனத்திற்கு 48 மணி நேரம் வரை ஆவதாக சொல்லப்படுகிறது. ஞாயிறுக்கிழமை என்பதால் திருப்பதி மலைக்கு ஏராளமான அளவில் பக்தர்கள் வந்து குவிந்துள்ளனர்.இதனால் திருப்பதி மலையில் திரும்பிய பக்கமெல்லாம் மனித தலைகளாகவே காணப்படுகின்றன. பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதை முன்னிட்டு 21ஆம் தேதி வரை விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், இலவச தரிசனத்திற்காக திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் இருக்கும் 62 அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி உள்ளனர். அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் நீண்ட வரிசையில் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே காத்திருக்கின்றனர்.