ஓணம் பண்டிகை: திருவனந்தபுரம் அரசு பெண்கள் பள்ளியில் அத்தப்பூ கோலப் போட்டி...!
ஓணம் பண்டிகையையொட்டி, திருவனந்தபுரம் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் விழா கொண்டாடப்பட்டது.
திருவனந்தபுரம்,
ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை கேரளாவில் பிரபலமானது. இந்த பண்டிகை கேரள மாநிலத்தில் பாரம்பரியச் சிறப்புடனும், பெரும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படும். அந்த வகையில் கேரளாவில் வருகிற 8-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி, திருவனந்தபுரம் அருகே உள்ள வழுதைக்காடு காட்டன் கில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அத்தப் பூ கோலப்போட்டியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.