ஒடிசா ரெயில் விபத்து : உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குகிறேன் : சேவாக்
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குகிறேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
பாலசோர்,
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குகிறேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
இந்த துயரமான நேரத்தில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வியை கவனித்துக்கொள்வதுதான் என்னால் செய்ய முடிந்தது.. சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியின் உறைவிட வசதியில் நான் அத்தகைய குழந்தைகளுக்கு இலவச கல்வியை வழங்குகிறேன் .