'பா.ஜ.க. சர்வாதிகார அரசாங்கத்தை வெளியேற்றும் இயக்கம் வெற்றி பெறும்' - அரவிந்த் கெஜ்ரிவால்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

Update: 2023-06-11 17:04 GMT

புதுடெல்லி,

டெல்லியில் அரசு அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் ஆகியவற்றில் டெல்லி அரசுக்கே அதிகாரம் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இச்சட்டத்திற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால், கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக அவசரச் சட்டம் கொண்டு வந்து டெல்லி மக்களை மத்திய அரசு அவமானப்படுத்திவிட்டதாக குற்றம் சாட்டினார்.

இதே போல் வருங்காலத்தில் மாநில அரசுகளின் அதிகாரத்தையும் மத்திய அரசு பறிக்கும் என அவர் தெரிவித்தார். பா.ஜ.க.வின் சர்வாதிகார அரசாங்கத்தை அகற்றவும், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைக் காப்பாற்றவும் இந்த மேடையில் தொடங்கும் இந்த இயக்கம் வெற்றி பெறும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்