சிறுவனை கவ்விச் சென்ற ஓநாயை அடித்தே கொன்ற கிராம மக்கள்

ஓநாய்கள் தாக்குதலில் இதுவரை 9 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகி உள்ளனர்.;

Update: 2024-10-06 20:33 GMT

கோப்புப்படம் 

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக ஓநாய்கள் அட்டகாசம் நீடித்து வந்தது. அதிகமாக பெய்த பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட அவை, ஊருக்குள் புக ஆரம்பித்தன. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பலரை கடித்துக் குதறி வந்தது.

ஆகஸ்டு 17 முதல் தொடர்ந்து வரும் ஓநாய்கள் தாக்குதலில் இதுவரை 9 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகி உள்ளனர். 54 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் பக்ரைச் மாவட்டத்தின் மகாசி கிராமத்தில் புகுந்த ஓநாய், சிறுவன் ஒருவனை கவ்விச் சென்றது. சிறுவனின் கூச்சல் கேட்டு அவனது தாய், வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தார். மகனை கவ்விச் சென்ற ஓநாயை விரட்டிச் சென்றார். கிராமத்தினரும் ஒன்றுகூடி ஓநாயை விரட்டிச் சென்று தாக்கினர். கம்பு மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் ஓநாய் உயிரிழந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்