இமாச்சல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு
நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, உடமை சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை .
இமாச்சல பிரதேசத்தில் சாம்பா மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்டுள்ளது சாம்பா மாவட்டத்தின் திஸ்ஸா பகுதிக்கு அருகில் உள்ள தார் மக்கான் என்ற இடத்தில் ஏற்பட்டதாகப் பேரிடர் மேலாண்மை சிறப்ப செயலாளர் சுதேஷ் மோக்தா தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, உடமை சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை என்றார்.