ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர்,
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கிஷ்த்வார் மாவட்ட மக்கள் பீதி அடைந்தனர்.
அதிகாரபூர்வ ஆதாரங்களின்படி, நிலநடுக்கம் மாலை 5.34 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியானது