மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மாநிலங்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மாநிலங்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2023-07-21 09:23 GMT

புதுடெல்லி

மணிப்பூர் விவகாரம் இரண்டாவது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியது.

மக்களவை இன்று கூடியதும், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு அவை கூடியதும் மீண்டும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை மீண்டும் வரும் திங்கட்கிழமை கூட உள்ளது.

இதுபோல் மாநிலங்களவையும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை மீண்டும் வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்குக் கூட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்