வீட்டு மாடியில் கொடி ஏற்ற முயன்ற போது தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு
மராட்டியத்தில் வீட்டு மாடியில் கொடி ஏற்ற முயன்ற முதியவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
பால்கர்,
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் 65 வயது முதியவர் ஒருவர் நேற்று வீட்டு மாடியில் கொடி ஏற்ற முயன்றபோது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
ஜவ்ஹரில் உள்ள ராஜேவாடியில் வசிக்கும் லக்சுமன் ஷிண்டே (வயது 65), என்ற முதியவர் நேற்று காலை 8 மணியளவில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தன்னுடைய வீட்டு மாடியில் தேசியக்கொடி ஏற்ற முயன்றார். அப்போது வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்தார்.
கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த அவர், உடனடியாக ஜவ்ஹரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் நாசிக்கில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர்.