மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு
கொரோனா தொற்றைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 23 ஆயிரத்து 918- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் மேலும் 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,48,293 ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 81 லட்சத்து 11 ஆயிரத்து 976 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 414- ஆக இருந்தது. உயிரிழப்பு 1- ஆக இருந்த நிலையில், இன்று பாதிப்பு அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5,513- ஆக உள்ளது. கொரோனா தொற்றைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 23 ஆயிரத்து 918- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.