ஒடிசாவில் பெய்த பலத்த கனமழையால் நிலச்சரிவு

பலத்த கனமழை காரணமாக ஒடிசாவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-07-18 00:34 GMT

ஒடிசா,

கஜபதி ஒடிசாவின் கஜபதி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் கும்மா தொகுதியின் மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவின் காரணமாக இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

கும்மா தொகுதி மேம்பாட்டு அதிகாரி பாஸ்கர் சந்திர சாஹு கூறுகையில், "கனமழை காரணமாக கும்மா தொகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலைகளில் இருந்து வந்த நீரால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பை ஆராய்ந்து வருகிறாம்" என்று அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்