கொல்கத்தாவில் 2,800 பேருக்கு டெங்கு காய்ச்சல்

கொல்கத்தாவில் 2,800 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Update: 2022-10-10 20:11 GMT

கோப்புப்படம்

கொல்கத்தா,

மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து டெங்கு காய்ச்சல் நோய் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து கடந்த 5-ந்தேதி வரையில் 2,800 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதே காலக்கட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 1,630 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பட்டதாக புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் 40 வாரங்களில் 654 டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியானதாகவும், இது 2018-க்கு பிறகு மிக அதிகமாம் என்றும் சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்