சித்தராமையா மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல்
சித்தராமையா மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
நில மோசடி விவகாரத்தில் பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவுப்படி மைசூரு லோக்அயுக்தா போலீசார் முதல்-மந்திரி சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உள்பட 4 பேர் மீது 17 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா, கா்நாடக ஐகோர்ட்டில் புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் முதல்-மந்திரி சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளார்.
அல்லது ஐகோர்ட்டு நீதிபதி மேற்பார்வையில் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.