ஜம்மு: வைஷ்ணவி தேவி குகைக் கோவிலுக்கு இந்த ஆண்டு 95 லட்சம் பக்தர்கள் வருகை
கடந்த 10 ஆண்டுகளில் இருந்ததை விட அதிக அளவிலான பக்தர்கள் 2023-ல் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு வருகை தந்துள்ளனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ரைசி மாவட்டம் கட்ராவில் உள்ள திரிகூட மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி குகைக் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சமீபத்தில் இந்த கோவிலுக்கு நடிகர் ஷாருக்கான் வருகை தந்து வழிபாடு செய்தார்.
இந்நிலையில் 2023-ம் ஆண்டில் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு இதுவரை சுமார் 94.35 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இது கடந்த 10 ஆண்டுகளில் இருந்ததை விட அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதற்கு முன்பாக கடந்த 2012-ம் ஆண்டு, 1.49 கோடி பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.