காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் நவ்போரா-கெர்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று அப்பகுதியில் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, மறைந்திருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. அதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.