அரிசி கொள்முதலுக்காக கியூபாவுக்கு இந்தியா ரூ.830 கோடி கடன்

அரிசி கொள்முதலுக்காக கியூபாவுக்கு இந்தியா ரூ.830 கோடி கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

Update: 2022-06-28 22:37 GMT

புதுடெல்லி,

கியூபா தலைநகர் ஹவானாவில், இந்தியாவுக்கும், கியூபாவுக்கும் இடையே 2-வது சுற்று வெளியுறவு அலுவலக பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியா தரப்பில், வெளியுறவு செயலாளர் (கிழக்கு) சவுரவ் குமாரும், கியூபா தரப்பில் வெளியுறவு உதவி மந்திரி அனயான்சி ரோட்ரிக்ஸ் கேமஜோவும் கலந்து கொண்டனர்.

வர்த்தகம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவின் முன்னேற்றம் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் பற்றி இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதில், அரிசி கொள்முதலுக்காக கியூபாவுக்கு இந்தியா 10 கோடி யூரோ (ரூ.830 கோடி) கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, கியூபா அரசு அஞ்சல் தலை வெளியிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்