மராட்டியத்தில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
மராட்டியத்தில் 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த 2 வாரமாக ஓய்வெடுத்து இருந்த தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. மாநிலத்தில் மும்பை, புனே, ராய்காட், சிந்துதுர்க் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
இந்தநிலையில், கட்சிரோலி, சந்திராப்பூர், கோண்டியா, நாக்பூர், வார்தா ஆகிய மாவட்டங்களிலும், பண்டாரா, அகோலா, புல்தானா, வாசிம், அமராவதி, யவத்மால் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
மும்பை, நவி மும்பை, தானே, பால்கர் ஆகிய இடங்களில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும். மும்பை மற்றும் தானேக்கு ஆரஞ்சு எச்சரிக்கைக்கை விடுக்கப்பட்டுள்ளது.