இமாசலபிரதேச மாநிலத்தில் நிலச்சரிவில் உயிருடன் புதைந்த 2 பெண்கள்

இமாசலபிரதேச மாநிலத்தில் நிலச்சரிவில் 2 பெண்கள் உயிருடன் புதைந்தனர்.

Update: 2022-08-11 23:48 GMT

கோப்புப்படம்

சிம்லா,

இமாசலபிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தில் நேற்று காலை 9 மணி அளவில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் காடெல் கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் உயிருடன் புதையுண்டனர்.

தகவல் அறிந்து பேரிடர் மீட்பு படையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். புதையுண்டவர்களின் பெயர்கள் சவேலு தேவி (வயது55), கிரித்திகா(17) என்று தெரியவந்துள்ளது. ஆனால் அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்