பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது: ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் குற்றச்சாட்டு

பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்று ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் குற்றச்சாட்டினார்.

Update: 2022-09-05 10:29 GMT

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி தனது அரசுக்கு இருக்கும் பெரும்பான்மையை காட்டிய ஹேம்ந்த் சோரன் பாஜகவை கடுமையாக சாடினார். ஹேமந்த் சோரன் கூறுகையில், " எங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பணப்பெட்டியுடன் சிலர் சுற்றிவந்தனர்.

அவர்களை விலைக்கு வாங்கும் பொறுப்பு அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வாஸுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. பாஜக தேர்தல் வெற்றிகளுக்காக ஆங்காங்கே குழப்பத்தை ஏற்படுத்தி வன்முறையை நிகழ்த்தி உள்நாட்டுப் போர் நடப்பது போன்ற சூழல்களை உருவாக்குகிறது. எதிர்க்கட்சியினர் ஜனநாயகத்தை சிதைத்துவிட்டனர். எப்போதும் எங்கும் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றனர்" என்றார்.

முன்னதாக ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மை பலத்தை முதல் மந்திரி ஹேமந்த் சோரன் காட்டினார். . 81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் 48 எம்எல்ஏக்கள் ஆதரவோடு ஹேமந்த் சோரன் தனது அரசுக்கு பெரும்பான்மையை நிரூபித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்