அரியானாவில் இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவர் நபே சிங் சுட்டுக்கொலை
அரியானாவில் மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் அரசியல் கட்சி தலைவர் பலியாகியிருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர்,
அரியானாவில் இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நபே சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பகதூர் என்ற இடத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.
அவரது கட்சி நிர்வாகி ஜெய்கிஷன் என்பவரும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். காயமடைந்த மேலும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில், அவர்கள் இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நிலத்தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்று இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. அரியானாவில் மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் அரசியல் கட்சி தலைவர் பலியாகியிருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.