டி.கே.சிவக்குமாருடன் எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. சந்திப்பு

டி.கே.சிவக்குமாருடன் எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. சந்தித்து பேசினார்.

Update: 2022-12-09 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர் எச்.விஸ்வநாத் எம்.எல்.சி.. அவர் சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, அவர் காங்கிரசில் சேருவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சித்தராமையாவை தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் எச்.விஸ்வநாத் நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, அரசியல் நிலை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

எச்.விஸ்வநாத் விரைவில் பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேர உள்ளார் என்று கூறப்படுகிறது. சித்தராமையாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு எச்.விஸ்வநாத் காங்கிரசை விட்டு விலகி ஜனதா தளம் (எஸ்) கட்சியில் சேர்ந்தார். அவருக்கு அக்கட்சியின் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. சட்டசபை தேர்தலில் உன்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் மந்திரி பதவி கிடைக்காததால் அக்கட்சியை விட்டு விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்