டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்

Update:2023-09-09 00:34 IST
Live Updates - Page 4
2023-09-09 05:01 GMT

உலக சுகாதார அமைப்பின் தலைவரை வரவேற்றார் பிரதமர் மோடி...!

ஜி20 மாநாட்டில் பங்கேற்க பாரத் மண்டபம் வந்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டிட்ரோஸ் அதானோமை பிரதமர் மோடி வரவேற்றார்.



2023-09-09 04:58 GMT

எகிப்து அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி...!

ஜி20 மாநாட்டில் பங்கேற்க பாரத் மண்டபம் வந்த எகிப்து அதிபர் அப்துல் பத்ஹா எல் சிசியை பிரதமர் மோடி வரவேற்றார். 



2023-09-09 04:23 GMT

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவை வரவேற்றார் பிரதமர் மோடி

ஜி20 மாநாட்டில் பங்கேற்க பாரத் மண்டபம் வந்த வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவை பிரதமர் மோடி வரவேற்றார். 



2023-09-09 04:16 GMT

ஜி20 மாநாட்டில் பங்கேற்க பாரத் மண்டபத்திற்கு வருகை தரும் உலக நாடுகளின் தலைவர்களை வரவேற்றார் பிரதமர் மோடி...!

ஜி20 மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வருகை தர தொடங்கியுள்ளனர்.

ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்திற்கு சர்வதேச நாணய நிதிய தலைவி கிறிஸ்டலினா ஜார்ஜிவா, ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், உலக வங்கி தலைவர் அஜய் பங்கா உள்ளிட்ட தலைவர்கள் வருகை தந்துள்ளனர். மாநாட்டில் பங்கேற்க வரும் உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்று வருகிறார். 



2023-09-09 04:10 GMT

பாரத் மண்டபத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வருகை

ஜி20 மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வருகை தர தொடங்கியுள்ளனர்.

2023-09-09 04:09 GMT

சவுதி அரேபியா பிரதமர் முகமது பின் சல்மான் டெல்லி வருகை...!

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க சவுதி அரேபியா பட்டத்து இளவரசரும், அந்நாடு பிரதமருமான முகமது பின் சல்மான் இன்று டெல்லி வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் முகமது பின் சல்மானுக்கு இந்திய அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.



2023-09-09 03:58 GMT

பாரத் மண்டபத்திற்கு பிரதமர் மோடி வருகை...!

ஜி20 மாநாடு நடைபெறும் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். பாரத் மண்டபத்தில் உள்ள சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி அரங்கில் மாநாடு நடைபெற உள்ளது.



2023-09-09 03:25 GMT

ஸ்பெயின் வெளியுறவுத்துறை மந்திரி டெல்லி வருகை...!

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஸ்பெயின் வெளியுறவுத்துறை மந்திரி ஜோஷ் மெனுயல் அல்பரிஸ் பியொனொ இன்று டெல்லி வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் ஜோஷ் மெனுயலுக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.



2023-09-09 03:05 GMT

ஜெர்மனி அதிபர் டெல்லி வருகை...!

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் இன்று டெல்லி வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் ஓலாப் ஸ்கால்ஸ்-க்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.



2023-09-09 02:26 GMT

ஜி20 மாநாடு இன்று நடைபெற உள்ள நிலையில் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்