உறவுக்கார சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை, மகன்

தந்தையும், மகனும் சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர்.

Update: 2024-05-14 18:24 GMT

மும்பை,

மராட்டியம் மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். இந்த சிறுமியின் உறவினர்களான 20 வயது வாலிபர் மற்றும் அவரது தந்தை அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கும், நவம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட நாட்களில் பல சந்தர்ப்பங்களில் வாலிபரும், அவரது தந்தையும் அந்த சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க மாத்திரைகளையும் கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த சிறுமியின் தாயார் பிவண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் தந்தை மற்றும் மகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான அவர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்