கல்வி லாபம் ஈட்டுவதற்கான தொழில் அல்ல; சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

கல்வி லாபம் ஈட்டுவதற்கான தொழில் அல்ல என்று வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது.

Update: 2022-11-08 09:20 GMT

புதுடெல்லி,


ஆந்திர பிரதேசத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கட்டண தொகையை ஆண்டுக்கு ரூ.24 லட்சம் என அரசு நிர்ணயித்தது. இதன்படி, 2017-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி ஆந்திர பிரதேச அரசு வெளியிட்ட அரசாணையில், 2017-2020-ம் ஆண்டுக்கான படிப்பு கட்டண தொகையை ஆண்டுக்கு ரூ.24 லட்சம் என உயர்த்தி அறிவிக்கப்படுகிறது என தெரிவித்தது.

எனினும், அரசின் இந்த உத்தரவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் ஆந்திர பிரதேச அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை ஏற்று, நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் சுதான்ஷூ தூலியா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை மேற்கொண்டது. அதில், கட்டண தொகையானது முன்பு நிர்ணயித்த தொகையை விட 7 மடங்கு அதிகம் என்றும் எந்த வகையிலும் நியாயமற்றது என கூறிய சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டின் உத்தரவை ஏற்று கொண்டதுடன், அதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்தது.

கல்வி என்பது லாபம் ஈட்டுவதற்கான ஒரு தொழில் அல்ல். எப்போதும், படிப்பு கட்டணத்திற்கு வசூலாகும் தொகையே போதியது என்றும் தனது தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்