மிசோரமில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு
மிசோரமின் என்கோபாவில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
என்கோபா,
மிசோரமின் என்கோபாவில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
என்கோபாவில் இருந்து கிழக்கே 61 கிலோ மீட்டர் தொலைவில் அதிகாலை 1.08 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.