பலத்த மழையால்.. பயங்கர நிலச்சரிவு..!! பலத்த காற்றால் 6 வீடுகள் சேதம்..

கேரளாவில் கனமழை காரணமாக கொச்சி- தனுஷ் கோடி தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-07-16 16:30 GMT

கோழிக்கோடு,

கேரளாவின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொச்சி - தனுஷ் கோடி தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் பலத்த காற்றால் குனிஞ்சியில் 6 வீடுகள் சேதமடைந்து உள்ளது. நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக் கல்லார்குட்டி, பொன்முடி அணைகளில் நீர் திறக்கப்பட்டு உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்